செயல்பாடு - 1 : அமுதத்தமிழ் மன்றம் - தமிழ் மன்ற அறிக்கை (2025 - 26) எந்நாளும் என்நாடு என்று போற்றிடுவோம் , சுதந்திரக் காற்றைச் சுவாசிப்போம் ! சேலம், செந்தில் பப்ளிக் பள்ளியில் அமுதத் தமிழ் மன்றம் சார்பாக 09.08.2025 அன்று இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களின் கதாப்பாத்திரம் ஏற்று நடித்தல் செயல்பாட்டின் தகுதிச் சுற்று நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 15.08.25 அன்று இறுதி சுற்று நடைப்பெற்றது. நடுவராகத் தமிழ்த்துறைத் தலைவி திருமதி. தமிழரசி மற்றும் திருமதி. இராஜராஜேஷ்வரி கலந்து கொண்டு சிறப்பித்தனர். இச்செயல்பாடு இறைவணக்கத்துடன் இனிதே துவங்கியது. தமிழ் மன்ற செயலாளர் செல்வி. பவ்யஸ்ரீ வரவேற்புரை ஆற்றினார். தமிழ் மன்ற மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். நடுவர்கள் சிறப்புரையாற்றி இறுதிச்சுற்றுக்கு முதல் பத்து இடங்களைப் பிடித்த மாணவர்களின் பெயர்களை அறிவித்ததுடன் வாழ்த்துகளையும் தொிவித்தனர். இறுதி சுற்றானது பள்ளி கலையரங்கத்தில் நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்குச் சிறப்பு விருந்தினர் பாிசுகள் வழங்கி பாராட்டினார். தேசிய கீதத்துடன் இச்செயல்பாடு இனிதே நிறைவடைந்தது.
செயல்பாடு - 2 : அமுதத்தமிழ் மன்றம் - எனது கிறுக்கல்(சிறுகதை எழுதுதல் ) “உன்னுள் உறைந்திருக்கும் கனவுகளின் திறவுகோல் புத்தகம்” சேலம் செந்தில் பப்ளிக் பள்ளியின் அமுதத் தமிழ் மன்றத்தின் சார்பாக மாணவர்களின் எழுத்தாற்றலை ஊக்குவிக்கும் வகையில் சிறுகதை எழுதுதல் போட்டி நவம்பர் மாதத்தின் தொடக்கத்தில் நடத்தப்பட்டது. இப்போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அதிலிருந்து 38 கதைகள் சிறந்த கதைகளாகத் தமிழ் ஆசிரியர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு எனது கிறுக்கல் என்ற தலைப்பில் சிறுகதை புத்தகமாகத் தொகுக்கப்பட்டுள்ளது. இப்புத்தகமானது 3.12.25 அன்று பள்ளி கலையரங்கத்தில் புத்தக வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர் திரு. ராம்கி விஜயன் அவர்கள் புத்தகத்தை வெளியிட பள்ளியின் தாளாளர் திருமதி. தீப்தி தனசேகர் அவர்கள் பெற்றுக் கொண்டார். தமிழ் மொழியில் மாணவர்களின் வாசித்தல் திறனை மேம்படுத்தவும், இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் இருந்தது. மேலும் 38 இளம் எழுத்தாளர்களுக்கு சிறப்பு விருந்தினர், பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் அனைவரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
2026 NOVEL CREATIVE ACADEMY. All rights reserved. Designed by Khabaitech